முதல் பக்கம் தொடர்புக்கு


குளம்பு அழுகல் நோய்

   இந்நோயினைப்பற்றி

   நோயின் தன்மை  
  • மாடுகளின் கால் குளம்புகளுக்கு இடையிலும், குளம்புகளைச்  சுற்றியும்,பின்னங்கால்களிலும் திசு அழிதல், அழற்சி, புண்கள் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் மாடுகளில் நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்புகளாகும். இதனால் பாதிக்கப்பட்ட மாடுகள் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்கமுடியாது.

    நோய்க்கான காரணங்கள்
  • இந்நோய் ஸ்பீரோஃபோரஸ் நெக்ரோபோரஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
  • அசைபோடும் விலங்கினங்களின் சீரண மண்டலத்தில் இந்த பாக்டீரியா சாதாரணமாகக் காணப்படும்.

   நோய்பரவும் முறை  
  • மாடுகளின் தோலில் புண்கள் மற்றம் காயங்கள் ஏற்படுத்தும் சூழ்நிலைகளான ஈரமான, சேறு  போன்ற கொட்டகைத்தரை,அல்லது கடினமான கொட்டகைத் தரை
  • உண்ணிகளால் மாடுகளின் தோலில் ஏற்படும் புண்கள்  அல்லது ஸ்ட்ராங்கைலஸ் பேப்பிலோசா லார்வாவினால் ஏற்படும் புண்கள் போன்றவை நோய் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • ஈரமான,வெதுவெதுப்பான சூழ்நிலைகளும் (20-25 டிகிரி செல்சியஸ்), மண், சாணம், வைக்கோல் போன்ற மாடுகளுக்கு படுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவையும் நோய் ஏற்படுவதற்குத் துணை புரிகின்றன.

top

   அறிகுறிகள்

  நோயின் அறிகுறிகள்
  • மாடுகள் நடக்கமுடியாமல் நொண்டுதல் இந்நோயின் முதல் அறிகுறியாகும்.
  • கால் குளம்புகளுக்கு இடையில் ஈரமாகவும் சிவந்தும் காணப்படுதல்.
  • கால் குளம்புகளுக்கு இடையில் கொப்புளங்கள் தோன்றுதல்.
  • கால்குளம்புகளின் கடினமான பகுதி கால்பகுதியிலிருந்து கழன்று விடுவதுடன், துர்நாற்றம் வீசுதல்.
  • பாதிக்கப்பட்ட மாடுகள் கால்களை உதைத்துக்கொண்டு இருத்தல், நடப்பதைத் தவிர்த்தல், வலியின் காரணமாக இரண்டு கால்களில் நடக்க முயற்சி செய்தல்.
  • ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால் குளம்புகள் பாதிக்கப்படுதல்.
  • உடல் வெப்பநிலை அதிகரித்து, மாடுகள் தீவனம் எடுக்காமல் இருப்பதால் உடல் எடை குறைதல்.

top

   மேலாண்மை முறைகள்

    நோயினைக் கட்டுப்படுத்துதல்  
  • ஈரமற்ற, காய்ந்த தரையுள்ள கொட்டகையில் மாடுகளைப் பராமரிக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து தனியாகப் பிரித்துப் பராமரிக்கவேண்டும்.
  • கால் குளம்புகளை 5% தாமிர சல்பேட் கரைசலில் சில நிமிடங்களுக்கு மூழ்கியிருக்குமாறு செய்யவேண்டும்.
  • வருடத்திற்கு இரண்டு முறை அதிகமாக வளர்ந்த குளம்புகளை வெட்டிவிட வேண்டும்.
  • ஃபார்மால்டிஹைடு அல்லது ஃபீனால் உபயோகப்படுத்தி ஒரு வாரத்திற்கு 1 -2 முறை கால்குளம்புகள் மூழ்கியிருக்குமாறு செய்யவேண்டும். இவ்வாறு சில வாரங்களுக்கு செய்யவேண்டும்.
  • குளம்புகளை ஒவ்வொரு முறை நறுக்கிய பிறகும் நோய்த்தடுப்பு முறையாகவும் இதனை மேற்கொள்ளலாம்.10% தாமிர சல்பேட் கரைசல் அல்லது 10 % தாமிர சல்பேட் கரைசலைப் பயன்படுத்தியும் கால்குளம்புகளை மூழ்க வைக்கலாம்.
  • தடுப்பூசிகளைப் பயன்படுத்தினால் நோயி்ன் தாக்கம் குறையும்.
  • இந்நோய்க்கான  இரண்டு தடுப்பூசிகளை மாடுகளின் கழுத்தில் 4-6 வார இடைவெளியில் போடவேண்டும்.
  • மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாக  இந்நோய்க்கான தடுப்பூசிகளை போடலாம். பிறகு வருடம் ஒருமுறை மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பும் தடுப்பூசிகளை போடவேண்டும்.

top